Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து பூங்காவில் வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

தாய்லாந்து பூங்காவில் வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழப்பு

Share:

பேங்காக், பிப்ரவரி.25-

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 72 புலிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'Canine distemper' எனும் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று காரணமாக புலிகள் இறந்துள்ளதை கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக நாய்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸானது, புலிகளின் சுவாசப்பை, வயிறு மற்றும் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை தாங்கள் கண்டறிந்த போது நிலைமை கையை மீறிச் சென்றிருந்ததாகவும், பூனைகள் அல்லது நாய்களைப் போல், புலிகளின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினமானது என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 240-க்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டிருந்த அந்த பூங்காவானது, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை