வாஷிங்டன், ஜனவரி.03-
வெனிசுலா தலைநகர் Caracas- சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரும் வேளையில் அந்த நாட்டின் நீண்ட கால ஆட்சியாளரான அதிபர் Nocolas Maduro சிறைபிடிக்கப்பட்டதாகவும், நாடு கடத்தப்பட்டு விட்டதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுலாவிற்கும், அமெரிக்காவுக்கும், இடையே நீண்ட கால பகை இருந்து வரும் வேளையில் அந்நாடு மீது அமெரிக்கா கடுமையானப் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்நிலையில், சில மாதம் முன், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் உச்ச கட்ட நடவடிக்கையாக தலைநகர் Caracas மீது அமெரிக்கா வான் தாக்குலைத் தொடங்கியுள்ளது.
வெனிசுலா போதை கடத்தல் மையமாக இருப்பதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்து போதிலும் அதன் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.








