Jun 22, 2026
Thisaigal NewsYouTube
மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல்பட்டிருக்கலாம், புதின் சந்தேகம் தீவிரமடையும் போர்
உலகச் செய்திகள்

மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல்பட்டிருக்கலாம், புதின் சந்தேகம் தீவிரமடையும் போர்

Share:

மாஸ்கோ: கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் தேதி இரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'பிக்னிக்' எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் படுகாயமடைந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியதால், கச்சேரி நடந்த கட்டிடம் தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோ மேயர் சோபியான் கூறுகையில், "குரோகஸ் சிட்டி மையத்தில் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியையும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல்பட்டிருக்கலாம்,... | Thisaigal News