Sep 13, 2026
Thisaigal NewsYouTube
லண்டனிலிருந்து புறப்பட்டு நடுவானில் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்
உலகச் செய்திகள்

லண்டனிலிருந்து புறப்பட்டு நடுவானில் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

Share:

லண்டன், பிப்ரவரி.03-

லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 விமானம் நடுவானில் சென்ற பிறகு அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விமானம் புறப்பட்ட உடன் அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டறிந்து பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக நடுவானில் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதுடன்,  இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் பற்றி பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்கக உத்தரவின்படி, அனைத்து போயிங் ரக விமானத்தின் சுவிட்சுகளும் பரிசோதனை செய்யப்பட்டன. எனினும் எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை.

எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை