Sep 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை
உலகச் செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை

Share:

வாஷிங்டன், பிப்ரவரி.23-

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஃபுளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் ரிசார்ட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி, எரிபொருளுடன் டிரம்ப் ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அந்த நபர் விடுதியின் வடக்கு நுழைவாயில் வழியாக ஒரு ஷாட்கன் துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேன் ஆகியவற்றுடன் நுழைய முற்பட்ட போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவத்தின் போது அதிபர் டிரம்ப்போ அல்லது பாதுகாப்பு வளையத்தில் உள்ள பிற முக்கிய நபர்களோ அந்த விடுதியில் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அந்த நபரின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை