Jun 22, 2026
Thisaigal NewsYouTube
தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் 
உலகச் செய்திகள்

தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் 

Share:

அமெரிக்கா, பிப்ரவரி 25 -

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.

இதன் மூலம், நியூ ஹாம்ப்ஷயர், நெவாடா, அயோவா மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகளில் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கான அனைத்து போட்டியிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டிரம்ப்பின் இந்த வெற்றி, 2011 மற்றும் 2017க்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபையின்(UN) பிரதிநிதியாக இருந்து, தென் கரோலினாவின் ஆளுநராகவும் பணியாற்றிய நிக்கி ஹேலி, அதிபர் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது.

தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் முடிவடைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு தனது வெற்றி உரையை ஆற்றிய முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், "குடியரசுக் கட்சி இது போல ஒற்றுமையாக இருப்பதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை" என்று கூறினார்

.இதற்கிடையில், மார்ச் 5ஆம் தேதி 15 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் ஒரு பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சூப்பர் செவ்வாய் போட்டிகள் வரை தனது பிரச்சாரத்தை தொடர இருப்பதாக ஹேலி உறுதியளித்துள்ளார்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி