Sep 13, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியாவில் 1,000 ஆண்டுகள் பழமையான “நடனமாடும் சிவன்” சிலை மீண்டும் உயிர்ப்பிப்பு
உலகச் செய்திகள்

கம்போடியாவில் 1,000 ஆண்டுகள் பழமையான “நடனமாடும் சிவன்” சிலை மீண்டும் உயிர்ப்பிப்பு

Share:

நோம் பென், மார்ச்.22-

கம்போடியாவில் 1,000 ஆண்டுகள் பழமையான “நடனமாடும் சிவன்” சிலை, பல தசாப்தங்களுக்கு முன்பு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, அந்தச் சிலையானது வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.

5 மீட்டர் உயரமும், சுமார் 7 டன் எடையும் கொண்ட இந்த மணற்கல் சிலையானது, 10 கைகள் மற்றும் 5 முகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், Khmer பேரரசின் பழமையான தலைநகரான Koh Ker பகுதியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

வட கம்போடியாவில் அமைந்துள்ள Koh Ker கோவில் சிதிலங்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு UNESCO-வின் சர்வதேச பாரம்பரியக் களப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இந்த “நடனமாடும் சிவன்” சிலையானது, மீண்டும் பிறந்ததாகக் கருதப்பட்டு, கடந்த மார்ச் 18-ஆம் தேதி, Siem Reap நகரிலுள்ள, அங்கோர் பாதுகாப்பு மையத்தில், மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நகரம் உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் மரபுத்தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை