Sep 13, 2026
Thisaigal NewsYouTube
இரு நாள் பயணமாக சனிக்கிழமை மலேசியா வருகிறார் பிரதமர் மோடி
உலகச் செய்திகள்

இரு நாள் பயணமாக சனிக்கிழமை மலேசியா வருகிறார் பிரதமர் மோடி

Share:

புதுடில்லி, பிப்ரவரி.05-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் சனிக்கிழமை முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறார்.

மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியப் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இது பிரதமர் மோடியின் மூன்றாவது மலேசியப் பயணமாகும். 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'விரிவான வியூக கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, 10-ஆவது இந்தியா-மலேசியா CEO மன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார். பிப்ரவரி 7-ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் MINES அனைத்துலக கண்காட்சி மையத்தில் பிரம்மாண்ட சமூக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை