Sep 13, 2026
Thisaigal NewsYouTube
குளியலறையில் மாட்டிய கரடி
உலகச் செய்திகள்

குளியலறையில் மாட்டிய கரடி

Share:

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள கேட்லின்பர்க் பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஒரு ஹோட்டல் குளியலறையிலிருந்து சத்தம் கேட்பதைக் கண்டு, உள்ளே யாரோ மாட்டிக்கொண்டதாக நினைத்த ஹோட்டல் உரிமையாளர் 911 என்ற அவசர எண்ணிற்கு அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதுகாப்பான தூரத்திலிருந்து ஒரு நீண்ட கம்பியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தனர்.

அப்போது உள்ளிருந்து ஒரு கரடி மிகவும் அமைதியாக வெளியே வந்து, நடைபாதையில் நடந்து சென்று அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது. முந்தைய நாள் இரவு திறந்திருந்த அறைக்குள் நுழைந்த அந்தக் கரடி, எதிர்பாராதவிதமாக குளியலறையில் மாட்டிக்கொண்டது தெரியவந்தது. இதனால் சிறிய அளவில் மட்டுமே சேதம் ஏற்பட்டதுடன், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. உணவைத் தேடி அருகில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கரடிகள் அடிக்கடி இந்த நகரத்திற்குள் நுழைவது வழக்கம் என்பது மேல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News