Jun 13, 2026
Thisaigal NewsYouTube
டில்லியில் தற்கொலைப்படை தாக்குதல்: மற்றொரு முக்கிய பயங்கரவாதி கைது
உலகச் செய்திகள்

டில்லியில் தற்கொலைப்படை தாக்குதல்: மற்றொரு முக்கிய பயங்கரவாதி கைது

Share:

புதுடெல்லி, டிசம்பர்.18-

டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு முக்கிய பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

டில்லியின் செங்கோட்டை அருகே கடந்த மாதம் 10ம் தேதி மாலை 6:52 மணியளவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை டாக்டர்கள் உட்பட 8 பயங்கரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் 9வது குற்றவாளியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த யாசிர் அகமது தர் என்பவனை டில்லியில் வைத்து கைது செய்யப்பட்டான்.

கார் குண்டுவெடிப்புச் சதியில் யாசிர் அகமது தர்ருக்கு முக்கிய பங்கு இருந்ததுடன், அதற்காக அவன் தீவிரமாக பணியாற்றியதையும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது என உறுதிமொழி ஏற்றதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய உமர் உன் நபி மற்றும் மற்றொரு குற்றவாளி முப்தி இர்பான் ஆகியோருடன் இவன் தொடர்பில் இருந்துள்ளதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி