Sep 13, 2026
Thisaigal NewsYouTube
கென்யாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு
உலகச் செய்திகள்

கென்யாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு

Share:

நைரோபி, மார்ச்.29-

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இந்த மாதத் தொடக்கத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக் காடானது.

பல்வேறு இடங்களிலும் நீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், கட்டிடங்கள் ஆகியவை நீரில் மூழ்கின. வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மின் விநியோகம் தடைபட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விமானம் உள்ளிட்ட போக்குவரத்துச் சேவையும் கடுமையாகப் பாதிப்படைந்தது.

கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளை அடுத்து, 2,700 குடும்பங்கள் பாதுகாப்பு தேடி வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டன. வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 108 பேர் பலியாகி உள்ளனர். இதனை கென்ய தேசிய போலீசார் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ஒரு சில பகுதிகளில் மழை ஓய்ந்த போதும், கழிவுநீர் ஓடைகளில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தரைப் பகுதியை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வெள்ளத்தின் பாதிப்பு தொடர்கிறது என்று மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை