Oct 2, 2026
Thisaigal NewsYouTube

இலங்கைக்கு நிவாரண பொருள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இலங்கைக்கு நிவாரண பொருள்

புதுடில்லி, நவம்பர்.30-

இலங்கையை புரட்டிப் போட்ட 'டிட்வா' புயலுக்கு இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதையடுத்து அங்கு, அவசர நிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் நேற்று இலங்கையை அடைந்தது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கு ஏற்ப, இந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →