தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றச்சாட்டின் கீழ், சென்னை பெரம்பூர் பகுதியில் இலங்கை குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் முறைகேடாக வாக்களித்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்குத் திரும்ப முயன்ற பயணிகளின் ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர். இந்தச் சோதனைகளின் மூலம் இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக வாக்களித்த பல வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

உலகச் செய்திகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை பிரஜை சென்னையில் கைது: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை


