Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ரியாத்தைக் குறி வைத்துத் தாக்க வந்த 3 ஏவுகணைகள் – சவுதி பாதுகாப்பு அமைச்சு உறுதி
உலகச் செய்திகள்

ரியாத்தைக் குறி வைத்துத் தாக்க வந்த 3 ஏவுகணைகள் – சவுதி பாதுகாப்பு அமைச்சு உறுதி

Share:

ரியாத், மார்ச்.22-

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே மூன்று ballistic ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை இன்று அறிவித்துள்ளது.

மூன்று ஏவுகணைகளில் ஒன்று இடைமறிக்கப்பட்டது. மற்ற இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவுதி உள்நாட்டுப் பாதுகாப்புப் படை இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

பின்னர், அபாயம் இல்லையென உறுதிச் செய்யப்பட்டதையடுத்து ஏழு நிமிடங்களில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மேலும், நள்ளிரவு முதல் ஐந்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களின் ஒரு பகுதியாக இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை