Sep 30, 2026
Thisaigal NewsYouTube

மூன்று ஆண்டுகளுக்குப் பின் சமந்தா நடித்திருக்கும் படம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று ஆண்டுகளுக்குப் பின் சமந்தா நடித்திருக்கும் படம்

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக குஷி என்ற படம் தான் 2023ல் வெளிவந்து இருந்தது. அதன் பிறகு அவர் சுபம் என்ற படத்தில் கௌரவத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

அண்மையில் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சமந்தா மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என சமந்தா அறிவித்து இருக்கிறார். சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →