Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை என 'கபாலி' நடிகை அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை என 'கபாலி' நடிகை அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில், ’கபாலி’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து, அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் முதலில் தபு நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர், ராதிகா ஆப்தேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரும் ஒப்புக் கொண்டதகாவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ராதிகா ஆப்தே அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் நடிக்க இருந்த கேரக்டரில் தற்போது நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’, ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’, விஜய் நடித்த ’ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதா தாமஸ், இந்த படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் இணையும் இந்த படம் ஓர் அதிரடி ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →