Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விஜய் சேதுபதியுடன் இணையும் தனுஷ் பட நடிகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய் சேதுபதியுடன் இணையும் தனுஷ் பட நடிகை

கடந்தாண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பாடல் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தலைவன் தலைவி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படத்தை இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். நடிகை சார்மி கவுர், பூரி ஜெகநாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், பிரபல நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தமிழில் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →