Jul 21, 2026
Thisaigal NewsYouTube
படையப்பா படத்தின் கதை பிடிக்கவில்லை
சினிமா

படையப்பா படத்தின் கதை பிடிக்கவில்லை

Share:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்று படையப்பா. இப்படத்தை இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ரஜினிக்கு இணையான மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் சௌந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன், செந்தில், நாசர், அப்பாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ரஜினியின் இரண்டு மகள்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை ப்ரிதா ஹரி. ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை வனிதாதானாம்.

இது குறித்து அவரே பேட்டியில் கூறியுள்ளார். "படையப்பா திரைப்படத்தில் முதன் முதலில் ரஜினியின் மகளாக நடிக்க இருந்தது நான் தான். நான் நடிக்க மறுத்து விட்டேன். அதன்பின் என் தங்கை பிரித்தாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, அவ நடிச்சிருந்தா. கதை கேட்டப்போ சுத்தமா எனக்குப் பிடிக்கவில்லை. ஹீரோயின் ரோலுக்கு கூப்பிட்டு இருந்தா ஒருவேளை நடித்திருப்பேன்" எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு படையப்பா ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ரீ ரிலீஸில் மட்டுமே ரூ. 18 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்