Nov 22, 2026
Thisaigal NewsYouTube

அடுத்த படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்த படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம்

ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஆனால், அதற்கு முன்பே ரஜினியின் 174வது படத்தின் புரோமோ படப்பிடிப்பு தொடங்கி விட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் தலைவர் 174.

இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 80ஸ் கெட்டப்பில் இருவரும் இருந்ததாகத் தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது 174வது படத்திற்காக ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ. 225 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தமிழ் சினிமாவில் நடிகர் வாங்கும் அதிகப்படியான சம்பளமாகும். 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →