Sep 27, 2026
Thisaigal NewsYouTube
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல் வேட்டை: முதல் நாளில் ரூ. 9.93 கோடி வசூலித்து அசத்தல்!
சினிமா

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல் வேட்டை: முதல் நாளில் ரூ. 9.93 கோடி வசூலித்து அசத்தல்!

Share:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் உலகளவில் முதல் நாளில் சுமார் ரூ. 9.93 கோடி வசூலித்து சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

அறிவியலும் காதலும் கலந்த இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.85 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ் பதிப்பு மட்டும் ரூ. 5.45 கோடியை வசூலித்து முன்னிலை வகிக்கிறது. வெளிநாடுகளில் ரூ. 2 கோடி வரை வசூலான நிலையில், மொத்த உலகளாவிய வசூல் ரூ. 9.93 கோடியை எட்டியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் திரைப்பயணத்தில் இது இரண்டாவது பெரிய ஓப்பனிங் ஆகும்.

2040-ஆம் ஆண்டு பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு மற்றும் சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தரின் இசை மற்றும் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், இரண்டாம் நாளிலும் வசூலில் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News