Jul 19, 2026
Thisaigal NewsYouTube
நாயகனாக அறிமுகமாகும் கேபிஒய் பாலா: தமிழ் சினிமாவின் முதல் பேட்மிண்டன் திரைப்படத் தலைப்பு வெளியீடு
சினிமா

நாயகனாக அறிமுகமாகும் கேபிஒய் பாலா: தமிழ் சினிமாவின் முதல் பேட்மிண்டன் திரைப்படத் தலைப்பு வெளியீடு

Share:

விளையாட்டுத் துறையை மையமாகக் கொண்டு உருவாகும் 'ரிமேட்ச்' திரைப்படத்தில் 'கலக்கப் போவது யாரு' புகழ் பாலா முதன்முறையாகக் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பேட்மிண்டன் இறகுப்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு முழு நீளக் கதையாக உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்தில் பாலாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், தனு ஹர்ஷா மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சின்னத்திரையில் தனது டைமிங் நகைச்சுவை மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாலா, தற்போது ஒரு விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் தடம் பதிப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Related News