Oct 15, 2026
Thisaigal NewsYouTube

லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் தனுஷ் பட நடிகை.. யார் தெரியுமா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஆக்‌ஷன் திரைப்படம் கைதி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இப்படத்தில் நரேன், KPY தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் LCU-விலும் இப்படத்தை இணைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் கைதி 2 படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மே மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

கைதி 2 திரைப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. கதாநாயகியாகவா அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →