Jul 22, 2026
Thisaigal NewsYouTube
லோகேஷ் கனகராஜ் படத்தை உறுதிச் செய்த அமீர் கான்
சினிமா

லோகேஷ் கனகராஜ் படத்தை உறுதிச் செய்த அமீர் கான்

Share:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில், அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில், அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் பணிபுரிய இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் பேட்டி அளித்த அமீர்கான், லோகேஷ் கனகராஜ் படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் ஒரு சூப்பர் கதாநாயகன் கதை அம்சம் கொண்டது என்றும், மிகப் பெரிய ஆக்ஷன் படமாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பப் பணியில் விறுவிறுப்பாக உள்ளார். இந்தப் படம் வெளியான பின், அவர் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அவர் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முடித்து, வெளியிடுவார் என்றும், அதன் பின்னர் அமீர் கான் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணையும் படம் பான் இந்தியா படமாக மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது