Jul 22, 2026
Thisaigal NewsYouTube
‘96' , 'மெய்யழகன்' இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படத்தில் யார்?
சினிமா

‘96' , 'மெய்யழகன்' இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படத்தில் யார்?

Share:

‘96' மற்றும் 'மெய்யழகன்' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நடிக்கவிருப்பதாகவும், விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ மற்றும் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த ‘மெய்யழகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும், தமிழ் சினிமாவின் தரமான படங்களாகப் பார்க்கப்படுகிறது. வசனங்கள் அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியும் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்பதும், காதல் தோல்வியை மிக அழகாக ’96’ படம் காட்டியது என்றும், உறவுகளின் புனிதத்தை ‘மெய்யழகன்’ படத்தில் பிரேம்குமார் சிறப்பாகக் காட்டியிருந்தார் என்றும் கூறலாம்.

இந்த இரண்டு படங்களுமே காதலர்கள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடியப் படங்களாக இருந்ததுடன், வசூல் அளவிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் அடுத்த படத்தில் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேம்குமார் கூறிய கதையை விக்ரம் கேட்டு ஆச்சரியப்பட்டதாகவும், உடனே “இந்தக் கதையை டெவலப் செய்யுங்கள்; விரைவில் படப்பிடிப்பு தொடங்குவோம்” எனக் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, விக்ரம் மற்றும் பிரேம்குமார் இணையும் புது படம் குறித்த அறிவிப்பு, இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது