Oct 11, 2026
Thisaigal NewsYouTube

தமது படம் குறித்து தகவல் கொடுத்த அஜித்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமது படம் குறித்து தகவல் கொடுத்த அஜித்

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் கார் பந்தயப் போட்டியில் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அன்மையில் நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்த அவர் "எனக்கு கிடைத்த இயக்குநர்களும், தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்குப் பார்வையைப் புரிந்துக் கொள்கின்றனர். நான் வருடத்திற்கு ஒரு சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது” என்றார்.

அதோடு “அடுத்த பருவத்தில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன். நான் என்று மீண்டும் பந்தயத்திற்குச் செல்ல வேண்டும் என நினைத்தேனோ அன்று முடிவு செய்தேன் நாம் மீண்டும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டு என்றும். கடந்த 8 மாத காலத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். டயட், சைக்கிலிங், ஸ்விமிங் , வெஜிடேரியனாகவும் மாறியதால் இது சாத்தியமானது" என அஜித் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →