Oct 11, 2026
Thisaigal NewsYouTube

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வேறொரு படத்தின் தழுவலா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வேறொரு படத்தின் தழுவலா?

தளபதி விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்த நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படம் பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடித்த ‘பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம், அந்த படத்தின் ரீமேக் உரிமையை 4.5 கோடி ரூபாய் கொடுத்துப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படம் ‘பகவத் கேசரி’யின் ரீமேக் தான் என்பது கிட்டத்தட்ட உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘பகவத் கேசரி’ திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். அந்த படம் சுமார் 130 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இப்படத்தில், பாலையா முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த நிலையில், தற்போது விஜய்யும் அதே வேடத்தில் நடித்து வருகிறார் என்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →