Oct 7, 2026
Thisaigal NewsYouTube

கபாலி சாதனையை முறியடித்த கூலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கபாலி சாதனையை முறியடித்த கூலி

கூலி திரைப்படம் வரும் 14ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார்.

நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படத்தைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கூலி திரைப்படம் முன் பதிவிலேயே பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் இதுவரை, முன் பதிவு ப்ரிமியரில் மட்டுமே 2 மில்லியன் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் கபாலி திரைப்படம் 1.9 மில்லியன் வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையைத் தற்போது கூலி முறியடித்துள்ளது.

மேலும் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்திற்கு ஜெர்மனியில் 10,000க்கும் மேல் டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. இதன் மூலம் ஜெர்மனியில் தமிழ்ச் சினிமா படங்களுக்கு புதிய மார்க்கெட் திறந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இத்தாலி நாட்டிலும் மார்க்கெட் திறக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →