நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம், திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 20-வது நாளை எட்டியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்த ஃபேண்டஸி கமர்ஷியல் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது 20 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் உலகளவில் மொத்தம் 297.12 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 300 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை இந்தத் திரைப்படம் மிக விரைவில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20-வது நாளில் இந்தியாவில் மட்டும் இப்படம் 1.55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் தமிழ் பதிப்பு 1.25 கோடி ரூபாயும், தெலுங்கு பதிப்பு 30 லட்சம் ரூபாயும் வசூலைக் கொடுத்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த நிகர வசூல் 188.45 கோடி ரூபாயாகவும், மொத்த வசூல் 217.87 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இதுவரை 79.25 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசியத் திரைப்படத் துறையின் முன்னோடி டான் ஸ்ரீ எல். கிருஷ்ணன் காலமானார்

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த சூர்யா - ஜோதிகா

‘மாடு அதாவ் ராசுன்’, ‘செலா’ நாடகத் தொடர்களை ஆய்வு செய்கிறது ஜாகிம் குழு

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படம் குறித்த புதிய தகவல்களை சிம்பு தெரிவித்துள்ளார்.


