Oct 7, 2026
Thisaigal NewsYouTube

சூர்யாவின் 46வது படத்தில் பாலிவுட் நடிகரா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சூர்யாவின் 46வது படத்தில் பாலிவுட் நடிகரா?

ரெட்ரோ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். தற்போது படத்தின் பிளாஷ்பேக் பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. அதோடு படத்திற்கு விஸ்வநாதன் அன் சன்ஸ் என்று பெயர் வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →