Oct 13, 2026
Thisaigal NewsYouTube

கூலி திரைப்பட வெளியீடு தள்ளிப் போகலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கூலி திரைப்பட வெளியீடு தள்ளிப் போகலாம்

ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அண்மையிக் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலானது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தற்போது ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளிவராது என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பிலான வார் 2 படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அனில் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது. வார் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூலி திரைப்படம் வெளியாகுவது தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →