Jun 13, 2026
Thisaigal NewsYouTube
விஜய் உடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?
சினிமா

விஜய் உடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?

Share:

இந்தியா, ஏப்ரல் 30-

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அப்படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கிய இவருக்கு, அந்நிகழ்ச்சியில் பணியாற்றியதன் மூலம் கமல்ஹாசன் உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தன்னிடம் இருக்கும் கதைகளையும் கமலிடம் கூறிய ராஜ்குமார் பெரியசாமிக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பும் கிடைத்தது.

அதுதான் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு. அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்துக்கு அமரன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக் ஆக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு, எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகின்றனர். தற்போது அமரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மே மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமரன் திரைப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு கொண்டு வரும் ஐடியாவில் இருந்த படக்குழு, தற்போது அதில் இருந்து பின்வாங்கி உள்ளது. அதற்கு பதிலாக செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அம்மாதம் தான் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது. அதனுடன் போட்டிபோட்டால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அமரன் படக்குழு செப்டம்பர் 27-ந் தேதியை லாக் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்