Jun 3, 2026
Thisaigal NewsYouTube
ரஜினிகாந்த்தின் 173 ஆவது படம்: மகனாக நடிக்கும் மலையாள நடிகர்
சினிமா

ரஜினிகாந்த்தின் 173 ஆவது படம்: மகனாக நடிக்கும் மலையாள நடிகர்

Share:

ஜெயிலர் 2, தலைவர் 173, தலைவர் 174 என மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் ரஜினிகாந்த். இதில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 மற்றும் தனது 174வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தலைவர் 174 படத்தின் புரோமோ வீடியோ வெளிவந்தது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து கமல் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மகனாக மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு