Jul 22, 2026
Thisaigal NewsYouTube
விக்ரமின் 64 ஆவது படத்தை இயக்கும் இயக்குநர் யார்?
சினிமா

விக்ரமின் 64 ஆவது படத்தை இயக்கும் இயக்குநர் யார்?

Share:

சீயான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் விக்ரம் 63. இப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்ரமின் 64 ஆவது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வகையில், இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில்தான் விக்ரம் தனது 64 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அடங்க மறு படத்தை இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதன்பின் இவர் எந்த திரைப்படமும் இயக்கவில்லை.

ஆனால், தற்போது விக்ரமின் 64 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரலாம்.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது