Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வெற்றிப் பட இயக்குநருடன் கூட்டு சேரும் நடிகர் சூர்யா.. 

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெற்றிப் பட இயக்குநருடன் கூட்டு சேரும் நடிகர் சூர்யா.. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து, அடுத்து சூர்யா 'லக்கி பாஸ்கர்' பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46 - வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், சூர்யா அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவர் பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஆவேசம்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →