Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கமல் ஹாசனுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கமல் ஹாசனுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்

கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் தக் லைஃப் திரைப்படம் வெளிவந்தது. நாயகன் படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மோசமான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அண்மையத் தகவல் வெளியாகியுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யூ. அருண்குமார். பிறகு சேதுபதி, சித்தா மற்றும் அண்மையில் வெளிவந்த வீர தீர சூரன் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். அருண்குமாரின் அடுத்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்பதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →