Oct 8, 2026
Thisaigal NewsYouTube

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் 

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் 

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமியின் 'அமரன்' படத்திற்குப் பின், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருக்கும் 'மதராஸி' படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். மதராஸி திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ரந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர் கள்ளாரக்கல், பிஜு மேனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழுடன், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. ஹிந்திப் பதிப்புக்கு 'தில் மாதராசி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது.

அண்மையில் இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படம் இயக்க இருப்பதாக உறுதிச் செய்தார். இதனிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக புஷ்கர்-காயத்ரி இயக்குநர் ஜோடியுடன் கூட்டணி சேரவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளராக சாம் சிஎஸ் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →