Oct 6, 2026
Thisaigal NewsYouTube

நயன்தாராவை அடுத்து மூக்குத்தி அம்மன் 2ல் இணைந்த நடிகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நயன்தாராவை அடுத்து மூக்குத்தி அம்மன் 2ல் இணைந்த நடிகை

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020 - ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்தப் படத்தில், தன்னுடைய மனைவியும், நடிகையுமான குஷ்பூவை ஆட வைக்க சுந்தர் சி திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா, இல்லையா என்பது தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →