Oct 18, 2025
Thisaigal NewsYouTube
நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
சினிமா

நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Share:

'சூது கவ்வும்' படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், 'ஓ மை கடவுளே', 'நித்தம் ஒரு வானம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான 'போர்தொழில்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கலந்து கொண்டனர்.

Related News