Aug 16, 2026
Thisaigal NewsYouTube
தேசிய திரைப்பட விருதை வென்ற நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்'
சினிமா

தேசிய திரைப்பட விருதை வென்ற நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்'

Share:

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம், 72-வது தேசிய திரைப்பட விழாவில் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்மதிப்புகளைப் பரப்பும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளதுடன், சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுசுக்கு சிறப்பு குறிப்பு விருதும் கிடைத்துள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர் வல்லிபுரம் வசந்தன் எனப்படும் 'கேப்டன் மில்லர்' அவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடும் கிராமத்து இளைஞரின் கதையைப் பேசுகிறது.

இந்தக் கோப்பையை தமிழர்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்க வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் இதனைப் போற்றிக் கொண்டாட வேண்டும் என்றும் நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Related News