Oct 23, 2026
Thisaigal NewsYouTube

கேப்டன் மில்லர் படத்தின் "ரைஸ் ஆப் மில்லர்" பாடல் வெளியானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேப்டன் மில்லர் படத்தின் "ரைஸ் ஆப் மில்லர்" பாடல் வெளியானது

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'.

அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →