இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக முழு நேர நாயகனாக நடித்துள்ள 'DC' படத்தின் வெளியீட்டு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக வாமிகா கபி சந்திரா என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
பழிவாங்கும் படலத்தையும் காதலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்டன், இப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.








