Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு ஆஸ்கார் விருது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு ஆஸ்கார் விருது

62 வயது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் முதல் முறையாக ஆஸ்கார் விருது வென்றிருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பல சவாலான காட்சிகளில் நடித்து பாராட்டுகளைப் பெறும் அவர் இதுவரை ஆஸ்கார் விருது பெறாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் அது தற்போது நிறைவேறி இருக்கிறது.

கடந்த பல தசாப்தங்களாக சினிமா துறையில் கலக்கி வரும் அவரது பணிகளைப் பாராட்டி இந்த கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் நடந்த 16th Governors Awards விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அதே விழாவில் நடிகர் Debbie Allen மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் Wynn Thomas ஆகியோருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

டாம் குரூஸ் ஆஸ்கார் விருது வாங்கிய போது அவருக்கு எல்லோரும் எழுந்து நின்று பாராட்டும் மரியாதையும் தெரிவிக்க பல நிமிடங்கள் கொடுக்கப்பட்டது.

மேடையில் பேசிய டாம் குரூஸ் தனக்கு சினிமா தான் எல்லாமே என கூறினார். "Making films is not what I do, it is who I am" என அவர் குறிப்பிட்டார்.  

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →