Oct 12, 2026
Thisaigal NewsYouTube

வசூல் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 2 - ம் பாகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வசூல் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 2 - ம் பாகம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2024ஆம் ஆண்டில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. படத்தில் அடுத்தென்ன அடுத்தென்ன என்று நம்மை தொடர்ந்து யோசிக்க வைத்து, இறுதியில் ட்விஸ்ட் வைத்து ஆச்சரியப்படுத்திருந்தார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்.

இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமான சாச்சனா, பிக் பாஸ் 8-லும் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மகாராஜா 2 படத்திற்கானக் கதையை நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறிவிட்டார்.

மேலும், நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்திற்கான திரைக்கதைப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் அவர் இந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →