Oct 23, 2026
Thisaigal NewsYouTube

இந்திக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்திக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய நடிகைகள் பலர் ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் நயன்தாரா இந்தியில் அறிமுகமாகி உள்ளார். படப்பிடிப்பில் நயன்தாராவின் சண்டை காட்சிகளை ஷாருக்கான் பாராட்டி இருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு நயன்தாராவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேசிடமும் இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷையும் தெறி இந்தி ரீமேக்கில் நடிக்க படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். எனவே ஜான்வி கபூர், கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கலாம் என்று தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. தற்போது சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →