Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கேம் சேஞ்சர் கூட்டணி மீண்டும் இணைகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேம் சேஞ்சர் கூட்டணி  மீண்டும் இணைகிறது

ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் அப்படத்தைத் தயாரித்த தில் ராஜூ வருத்தம் தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படம் நாங்கள் நினைத்தது போல ஓடவில்லை. ராம் சரணை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படம் தயாரிக்க முடியவில்லை என வருத்தம் இருக்கிறது. அதனால் அடுத்து ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை ராம் சரணை வைத்து தயாரிக்கிறேன் அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்" என அவர் கூறினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →