தமிழ் சினிமா நடிகர்கள் சிலருக்கு உண்மையான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். அப்படி ப்ளஸ் மைனஸ் என எதுவாக இருந்தாலும் ஒரு நடிகருக்கு அவரது ரசிகர்கள் மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர்.
அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிம்புவிற்கு தான். இவரது சினிமா பயணத்தில் பார்க்காத பிரச்சனைகள் இல்லை சர்ச்சைகள் இல்லை. சில நேரம் தோல்வி படங்களையும் சந்தித்துள்ளார். இடையில் நடிக்காமலும் இருந்திருக்கிறார்.
ஆனால் இவரை ரசிகர்கள் எப்போதுமே கை விட்டது இல்லை, தற்போது சிம்புவும் தன்னை புதுமனிதராக மாற்றி வேகமாக சூப்பர் படங்களாக நடித்து வருகிறார்.
இப்போது தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரெண்ட் உலா வருகிறது. அதாவது புதுப்படங்கள் வாரா வாரம் ரிலீஸ் ஆவதை தாண்டி டாப் நடிகர்களின் பழைய ஹிட் படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி வருகின்றன.
கடைசியாக அஜித்தின் 50வது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகி இருந்தது. தற்போது என்ன தகவல் என்றால் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம். வரும் பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியாவதாக தகவல் வந்துள்ளது.








