கூலி படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என கூலி படப்பிடிப்பு நேரத்திலேயே தகவல் வந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து லோகேஷ் திடீரென வெளியேறி விட்டார். அதற்கு பிறகு சுந்தர்.சி அந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அவர் இரண்டு நாட்களில் வெளியேறி விட்டார்.
அடுத்து டான் பட புகழ் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். அந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் ரஜினி - கமல் படத்தில் இருந்து தான் வெளியேறியது ஏன் என்கிற காரணத்தை லோகேஷ் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
கைதி 2 படத்தை விட்டு விட்டு ரஜினி - கமல் படத்திற்காக வந்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவர் சொன்ன கதை பிடித்தாலும், அது வேண்டாம் ஒரு லைட் ஹார்ட்டட் படம் தான் வேண்டும் என ரஜினி - கமல் இருவரும் கூறினார்களாம்.
அந்த மாதிரி படம் என்னால் பண்ண முடியாது என கூறி விட்டு லோகேஷ் வெளியேறி விட்டாராம். அதன் பிறகு தான் லோகேஷ் தற்போது அல்லு அர்ஜுன் படத்தில் பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்.








