Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் நாயகி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் நாயகி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்த வீடியோ ஒன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ’புஷ்பா 2’ என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பின்னர், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் தீபிகா படுகோனே இணைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகாவிடம் அட்லி கதை சொல்லும் காட்சியும், தீபிகா படுகோன் சம்பந்தமான வியப்பூட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ஐந்து அல்லது ஆறு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தீபிகா படுகோனே என்று உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →