Oct 5, 2026
Thisaigal NewsYouTube

மகேஷ்பாபுவைத் தொடர்ந்து ராஜமௌலி கூட்டணி சேரப் போவது யார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மகேஷ்பாபுவைத் தொடர்ந்து ராஜமௌலி கூட்டணி சேரப் போவது யார்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமௌலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றைப் பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் மகேஷ்பாபுவைத் தொடர்ந்து ராஜமவுலியுடன் அல்லு அர்ஜூன் கூட்டணி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →