Jul 21, 2026
Thisaigal NewsYouTube
அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி விட்டாரா?
சினிமா

அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி விட்டாரா?

Share:

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திலிருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதி திடீரென விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்காதது, தன்னால் கொடுக்கப்பட்ட கால்ஷீட் வீணானது போன்ற காரணங்களால் இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி விலகியுள்ள நிலையில், அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து விலகியதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து வெளியேறவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்